பால் வியாபாரி மனைவியிடம் சங்கிலி பறிப்பு
பால் வியாபாரி மனைவியிடம் மனைவியை சங்கிலியை மர்ம நபர்கள் பறித்து சென்றனர்.
திருச்சி:
திருச்சி நொச்சியம் மேல தெருவை சேர்ந்தவர் செல்லப்பெருமாள் (வயது 50), பால் வியாபாரி. இவருடைய மனைவி காந்திமதி (48). செல்லப்பெருமாள் நேற்று திருச்சி என்.எஸ்.பி.ரோட்டில் உள்ள நகைக்கடைக்கு தனது குடும்பத்தினருடன் மோட்டார் சைக்கிளில் சென்றார். பின்னர், நகைக்கடையில் தனது மகளுக்கு கொலுசு வாங்கிவிட்டு, மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்டு சென்று கொண்டிருந்தார். திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கொள்ளிடம் மேம்பாலத்தில் சென்றபோது, அவர்களை பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து வந்த 2 மர்ம ஆசாமிகள் காந்திமதி கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் சங்கிலியை பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிச்சென்றுவிட்டனர். இந்த சம்பவம் குறித்து காந்திமதி கொடுத்த புகாரின் பேரில் ஸ்ரீரங்கம் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story