தூத்துக்குடியில் பெண்ணிடம் 3 பவுன் தங்க சங்கிலி பறிப்பு


தூத்துக்குடியில் பெண்ணிடம் 3 பவுன் தங்க சங்கிலி பறிப்பு
x
தினத்தந்தி 11 April 2022 8:47 PM IST (Updated: 11 April 2022 8:47 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் பெண்ணிடம் 3 பவுன் தங்க சங்கிலி பறித்து சென்ற 3 மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.

தூத்துக்குடி:
தூத்துக்குடி ஆ.சண்முகபுரத்தை சேர்ந்தவர் அந்தோணி. இவருடைய மனைவி எலிசபெத் ராணி (வயது 44). இவர் வீட்டு முன்பு தண்ணீர் தெளித்து கொண்டு இருந்தார். அப்போது ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த 3 மர்ம நபர்கள்  திடீரென எலிசபெத் ராணி கழுத்தில் கிடந்த 3 பவுன் தங்கசங்கிலியை பறித்துக் கொண்டு தப்பி சென்று விட்டனர். நகையின் மதிப்பு ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் என்று கூறப்படுகிறது.
இது குறித்த புகாரின் பேரில் தாளமுத்துநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து 3 மர்ம நபர்களை தேடிவருகின்றனர்.

Next Story