குடிநீர் லாரி மோதி பெண் போலீஸ் பரிதாப சாவு
மார்த்தாண்டத்தில் குடிநீர் லாரி மோதிய விபத்தில் பெண் போலீஸ் பரிதாபமாக இறந்தார். இதுதொடர்பாக டிரைவர் கைது செய்யப்பட்டார்.
குழித்துறை:
மார்த்தாண்டத்தில் குடிநீர் லாரி மோதிய விபத்தில் பெண் போலீஸ் பரிதாபமாக இறந்தார். இதுதொடர்பாக டிரைவர் கைது செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
பெண் போலீஸ்
குமரி மாவட்டம் நித்திரவிளை அருகே உள்ள கிராத்தூர் பகுதிைய சேர்ந்தவர் கிறிஸ்டல் பாய் (வயது 45). இவர் கருங்கல் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வந்தார். இவருடைய கணவர் லைசன் (50), ஓய்வு பெற்ற ராணுவ வீரர். இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
கிறிஸ்டல் பாய் நேற்று காலையில் பணியை முடித்து விட்டு மார்த்தாண்டம் வெட்டுமணியில் உள்ள குழித்துைற அரசு ஆஸ்பத்திரிக்கு ஸ்கூட்டரில் சொந்த வேலையாக சென்றார். பின்னர் அங்கிருந்து மீண்டும் புறப்பட்டார்.
விபத்தில் சாவு
மார்த்தாண்டம் மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த போது அவருக்கு பின்னால் ஒரு குடிநீர் லாரி வந்து கொண்டிருந்தது. இந்தநிலையில் திடீரென குடிநீர் லாரி கிறிஸ்டல் பாய் சென்ற ஸ்கூட்டர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் படுகாயமடைந்து அதே இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். இதை கண்ட அந்த பகுதி மக்கள், வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
டிரைவர் கைது
இதுபற்றி தகவல் அறிந்ததும் மார்த்தாண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் வேல்குமார் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து பலியான கிறிஸ்டல் பாயின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குழித்துைற அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் சம்பவ இடத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டு கணேசன் விசாரணை நடத்தினார். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவரான களியக்காவிளை அருகே உள்ள அடைக்காகுழி பகுதியை சேர்ந்த பாபு (49) என்பவரை கைது செய்தனர்.
ஸ்கூட்டர் மீது குடிநீர் லாரி மோதியதில் பெண் போலீஸ் பரிதாபமாக இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story