கூலித்தொழிலாளிக்கு 40 ஆண்டு சிறை
கூலித்தொழிலாளிக்கு 40 ஆண்டு சிறை
திருப்பூர்,
திருப்பூரில் 8 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த கூலித்தொழிலாளிக்கு 40 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் தீர்ப்பு கூறப்பட்டது.
40 ஆண்டு சிறை
திருப்பூர் மாவட்டம் உடுமலை கல்லாபுரத்தை சேர்ந்தவர் அமாவாசை (வயது 47). கூலித்தொழிலாளி. இவர் கடந்த 1-7-2020 அன்று 8 வயது சிறுமியிடம் பாலியல் தொந்தரவு செய்தார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் உடுமலை மகளிர் போலீசார் போக்சோ பிரிவின் கீழ் அமாவாசையை கைது செய்தனர்.
இதுகுறித்த வழக்கு விசாரணை திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. பாலியல் குற்றத்துக்காக அமாவாசைக்கு 40 ஆண்டு சிறை தண்டனை, ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி சுகந்தி தீர்ப்பளித்தார்.
பாராட்டு
இந்த வழக்கில் அரசு வக்கீல் ஜமீலா பானு ஆஜராகி வாதாடினார். சிறப்பாக செயல்பட்ட உடுமலை மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி, கோர்ட்டு பணி பெண் காவலர் பூர்ணிமா ஆகியோரை திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய் பாராட்டினார்.
Related Tags :
Next Story