ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறையை போக்க வேண்டும் துரை.ரவிக்குமார் எம்.பி. வலியுறுத்தல்
ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறையை போக்க வேண்டும் என்று துரை.ரவிக்குமார் எம்.பி. தெரிவித்தார்.
விழுப்புரம்,
விழுப்புரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் துரை.ரவிக்குமார் நேற்று மாலை நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழ்நாட்டில் ஆதிதிராவிடர் நலத்துறையால் நடத்தப்படும் பள்ளிகள் அதிகமாக இருக்கும் மாவட்டங்களில் ஒன்று விழுப்புரம் ஆகும். இவ்வாறு இருக்க ஆதிதிராவிடர் நல தொடக்கப் பள்ளிகளில் போதுமான ஆசிரியர்கள் இல்லாததால் மாணவர்களின் கல்வி பெருமளவில் பாதிப்படைகிறது.
எனவே ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளுக்கு உரிய எண்ணிக்கையில் ஆசிரியர்களை நியமிக்க முதல்-அமைச்சர் சிறப்பு கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் மாணவர்களின் கல்வித்தரத்தை மேம்படுத்த வேண்டும். ஆதிதிராவிட நலப்பள்ளிகளை சீரமைக்கவும், அங்குள்ள மாணவர்களின் கல்வித்தரத்தை மேம்படுத்தவும் ஒரு குழுவை அரசு அமைக்க வேண்டும்.
விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் இருளர் சமூக மக்கள் அதிகம்பேர் உள்ளனர். இருளர் சமூக மாணவர்களுக்காக சிறப்பு பள்ளிகள் கொண்டு வர வேண்டும். மேலும் விழுப்புரத்தில் ஏகலைவா உண்டு உறைவிட பள்ளியை மத்திய அரசு அரசு வழங்காவிட்டாலும் தமிழக அரசு சிறப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story