வைகை அணையில் தண்ணீர் திறப்பு


வைகை அணையில் தண்ணீர் திறப்பு
x
தினத்தந்தி 11 April 2022 10:53 PM IST (Updated: 11 April 2022 10:53 PM IST)
t-max-icont-min-icon

மதுரை சித்திரை திருவிழாவை முன்னிட்டு வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.

ஆண்டிப்பட்டி:

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே வைகை அணை உள்ளது. மொத்தம் 71 அடி உயரம் கொண்டது. இந்த அணையில்  நீர்மட்டம் 68.54 அடி இருந்தது. ஆண்டுதோறும் மதுரை சித்திரை திருவிழாவில் ைவகை ஆற்றில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சிக்கு வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பது வழக்கம். 

இந்த ஆண்டு சித்திரை திருவிழாவில் வருகிற 16-ந்தேதி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியை முன்னிட்டு வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது. 

அதன்படி வைகை அணையில் இருந்து  வினாடிக்கு 1,000 கனஅடி வீதம் சிறிய மதகுகள் வழியாக தண்ணீர் திறக்கப்பட்டது. வருகிற 16-ந்தேதி வரை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுகிறது. 
ஆண்டுதோறும் சித்திரை திருவிழாவில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சிக்கு 3 நாட்கள் முன்பு தான் ைவகை அணையில் தண்ணீர் திறக்கப்படும். ஆனால் இந்த ஆண்டு 5 நாட்களுக்கு முன்பே தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது என்று பொதுப்பணித்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Next Story