காரிமங்கலம் அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை


காரிமங்கலம் அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 11 April 2022 11:22 PM IST (Updated: 11 April 2022 11:22 PM IST)
t-max-icont-min-icon

காரிமங்கலம் அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

காரிமங்கலம்:
பாலக்கோடு அருகே எட்டியாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார். லாரி டிரைவர். இவரது மனைவி ஜோதி (வயது 21). இருவருக்கும் கடந்த 1½ ஆண்டுக்கு  முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு 2 மாத கைக்குழந்தை உள்ளது. ஜோதி காரிமங்கலம் அருகே சின்னாண்டியூர் கிராமத்தில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு வந்தார். நேற்று முன்தினம் இரவு அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து காரிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இளம்பெண் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக தர்மபுரி உதவி கலெக்டர் சித்ரா விஜயன் விசாரணை  நடத்தி வருகிறார்.

Next Story