மகேந்திரமங்கலம் அருகே தொழிலாளியின் குடிசை தீயில் எரிந்து சாம்பல்


மகேந்திரமங்கலம் அருகே தொழிலாளியின் குடிசை தீயில் எரிந்து சாம்பல்
x
தினத்தந்தி 11 April 2022 11:23 PM IST (Updated: 11 April 2022 11:23 PM IST)
t-max-icont-min-icon

மகேந்திரமங்கலம் அருகே தொழிலாளியின் குடிசை தீயில் எரிந்து சாம்பலானது.

பாலக்கோடு:
மகேந்திரமங்கலம் அருகே பொம்மனூர் கிராமத்தை சேர்ந்தவர் நரசிம்மன் (வயது52). தொழிலாளி. இவரது குடிசை நேற்று மாலை திடீரென தீப்பிடித்து எரிந்தது. அக்கம் பக்கத்தினர் பாலக்கோடு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
இருப்பினும் குடிசை முற்றிலும் எரிந்து சாம்பலானது. மேலும் குடிசையில் இருந்த துணிமணிகள், உணவு தானியங்கள் உள்ளிட்ட பொருட்கள் தீயில் கருகின. தீவிபத்துக்கான காரணம் குறித்து மகேந்திரமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story