ராசிபுரம் ரெயில் தண்டவாளத்தில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் ஆண் பிணம் ரெயில்வே போலீசார் விசாரணை


ராசிபுரம் ரெயில் தண்டவாளத்தில்  தலை துண்டிக்கப்பட்ட நிலையில் ஆண் பிணம்  ரெயில்வே போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 11 April 2022 11:26 PM IST (Updated: 11 April 2022 11:26 PM IST)
t-max-icont-min-icon

ராசிபுரம் ரெயில் தண்டவாளத்தில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் ஆண் பிணம் ரெயில்வே போலீசார் விசாரணை

ராசிபுரம்:
ராசிபுரம் டவுன் பகுதியில் நாமக்கல் சாலையில் உள்ள எல்.ஐ.சி. அலுவலகம் அருகில் கரூர்- சேலம் ரெயில் பாதை செல்கிறது. நேற்று காலையில் இந்த ரெயில்வே பாதையில் 55 முதல் 60 வயது மதிக்கத்தக்க ஒருவர் தலை துண்டிக்கப்பட்ட நிலையில், கை கால்கள் முறிந்த நிலையில் தண்டவாளத்தில் பிணமாக கிடந்தார். அவர் யார்? எந்த ஊர்? அங்கு எப்படி அவர் வந்தார்? போன்ற விவரம் எதுவும் உடனடியாக தெரியவில்லை. அவர் ரெயில் மோதி இறந்தாரா? அல்லது ரெயில் வரும்போது தண்டவாளத்தில் விழுந்து தற்கொலை செய்து கொண்டாரா? என்று தெரியவில்லை. 
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற ராசிபுரம் போலீசார் மற்றும் சேலம் ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தினர். நேற்று அதிகாலை 4½ மணி அளவில் மும்பையில் இருந்து ராசிபுரம் வழியாக நெல்லைக்கு சென்ற ரெயிலில் மோதி அவர் இறந்திருக்கலாம் அல்லது அந்த ரெயிலில் அவர் விழுந்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என ரெயில்வே போலீசார் தெரிவித்தனர். 
தண்டவாளத்தில் பிணமாக கிடந்தவரின் உடலை சேலம் ரெயில்வே போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் ராசிபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story