ரூ 20 லட்சத்தில் வேளாண்மை கூட்டுறவு வங்கி கட்டிடம்
திருவெண்காடு அருகே பெருந்தோட்டம் கிராமத்தில் வேளாண்மை கூட்டுறவு வங்கி உள்ளது. இந்த வங்கிக்கு ரூ 20 லட்சம் செலவில் புதிய கட்டிடம் கட்டப்பட்டு அதன் திறப்பு விழா நடந்தது.
திருவெண்காடு:
திருவெண்காடு அருகே பெருந்தோட்டம் கிராமத்தில் வேளாண்மை கூட்டுறவு வங்கி உள்ளது. இந்த வங்கிக்கு, ரூ. 20 லட்சம் செலவில் புதிய கட்டிடம் கட்டப்பட்டு அதன் திறப்பு விழா நடந்தது. விழாவிற்கு மாவட்ட கூட்டுறவு துணைப்பதிவாளர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். ஒன்றியக்குழு தலைவர் கமல ஜோதி தேவேந்திரன், தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் சசிகுமார், பிரபாகரன், சங்கத் தலைவர் ராமகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்க செயலாளர் கார்த்திக் வரவேற்றார். இதில் பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு புதிய கட்டிடத்தை திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றினார். இதில் கூட்டுறவு வளர்ச்சி அதிகாரி நடராஜன், ஊராட்சி துணைத்தலைவர் பாஸ்கர், முன்னாள் துணைத் தலைவர் கோவிந்தராஜ் மற்றும், கூட்டுறவு சங்க இயக்குனர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் சங்க எழுத்தர் பிரபு நன்றி கூறினார்.
Related Tags :
Next Story