தீயணைப்பு துறையில் உயிர் நீத்தோருக்கு அஞ்சலி


கரூர்
x
கரூர்
தினத்தந்தி 14 April 2022 5:55 PM GMT (Updated: 2022-04-14T23:25:22+05:30)

தீயணைப்பு துறையில் உயிர் நீத்தோருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

கரூர்,
கரூரில் தீயணைப்பு துறை அலுவலகத்தில் தீயணைப்பு மீட்புப்பணிகள் துறை சார்பில் பணியின் போது உயிர்நீத்த தீயணைப்பு வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நீத்தார் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. அப்போது நினைவு ஸ்தூபி போல உபகரணங்களை வைத்து அதற்கு மாலை அணிவித்து, மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. இதற்கு உதவி மாவட்ட அலுவலர் சந்திரகுமார் தலைமை தாங்கினார். இதில் நிலைய அலுவலர் விஜயகுமார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். தீயணைப்பு மீட்புப்பணிகள் துறை சார்பில் வருகிற 20-ந்தேதி வரை தீத்தொண்டு நாள் வார விழா கடைப்பிடிக்கப்படுகிறது. இதனையொட்டி நிலைய அலுவலர் விஜயகுமார் தலைமையில் மாநகரின் பல்வேறு பகுதிகளில் தீயணைப்பு துறையினர் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நோட்டீஸ்களை வழங்கினர்.
இதேபோல் வேலாயுதம்பாளையம் தீயணைப்பு நிலையத்தில் தீ தொண்டு தினம் கடைபிடிக்கப்பட்டது. இதையடுத்து நிலைய அலுவலர் திருமுருகன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள், வீரமரணமடைந்த தீயணைப்பு வீரர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தினர்.Next Story