தர்மபுரியில் உயிரிழந்த தீயணைப்பு வீரர்களுக்கு அஞ்சலி


தர்மபுரியில் உயிரிழந்த தீயணைப்பு வீரர்களுக்கு அஞ்சலி
x
தினத்தந்தி 15 April 2022 5:48 PM GMT (Updated: 2022-04-15T23:18:27+05:30)

தர்மபுரியில் உயிரிழந்த தீயணைப்பு வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

தர்மபுரி:
தீயணைப்பு சம்பவத்தின்போது உயிரிழந்த தீயணைப்பு வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி தர்மபுரியில் உள்ள மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு துறை அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட தீயணைப்பு அலுவலர் அப்பாஸ் தலைமை தாங்கி உயிரிழந்த தீயணைப்பு வீரர்களுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அப்போது நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், வருகிற 20-ம் தேதி வரை தர்மபுரி மாவட்டத்தில் தீயணைப்பு மற்றும் மீட்பு துறை சார்பில் தீ தொண்டு வாரம் கடைபிடிக்கப்படும் என்று தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் உதவி மாவட்ட அலுவலர் ஆனந்த், தீயணைப்பு நிலைய அலுவலர்கள் ராஜா (தர்மபுரி), செல்வமணி (பாப்பிரெட்டிப்பட்டி), பழனிசாமி (அரூர்), கோபால் (பென்னாகரம்), மணிகண்டன் (ஒகேனக்கல்), செல்வம் (பாலக்கோடு), தீத்தடுப்பு குழு நிலைய அலுவலர் குணசேகரன், சிறப்பு நிலைய அலுவலர்கள் கன்னியப்பன், சந்தோஷ் மற்றும் தீயணைப்பு வீரர்கள் கலந்து கொண்டனர்.

Next Story