ஆசிரியர் கழக செயற்குழு கூட்டம்


கரூர்
x
கரூர்
தினத்தந்தி 15 April 2022 7:11 PM GMT (Updated: 15 April 2022 7:11 PM GMT)

உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக செயற்குழு கூட்டம் நடந்தது.

கரூர்
கரூரில் தமிழ்நாடு உயர்நிலை - மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் அவசர செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் சந்திரசேகர் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் மலைக்கொழுந்தன் சிறப்புரை ஆற்றினார். இதில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் கரூர் மாவட்ட நிர்வாகிகள் 7 பேரை தற்காலிக பணிநீக்கம் செய்த கரூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் ஆசிரியர் விரோத செயல்பாடுகளை கண்டிப்பது, கரூர் மாவட்ட கல்வித்துறையில் குழப்பத்தையும், போராட்டத்தையும் தூண்டிவிடும் முதன்மை கல்வி அலுவலரை இடமாற்றவும் செய்யவும், அவர் மீது துறை ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள முதல்-அமைச்சர், கல்வித்துறை அமைச்சர், மின்சாரத்துறை அமைச்சர் ஆகியோருக்கு மனு கொடுப்பது, புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக வழங்கிட வேண்டும். சனிக்கிழமைகளில் தொடர் பணி நாள் என்பது மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் மன உளைச்சலை கொடுக்கிறது. எனவே அனைத்து வகை பள்ளிகளுக்கும், சனிக்கிழமை பணிநாள் என்பதை தமிழ்நாடு அரசு உடனடியாக விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் பொருளாளர் சரவணன், தலைமையிட செயலாளர் கனகராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story