தமிழ் புத்தாண்டையொட்டி திருச்செங்கோட்டில் 1,008 சிவலிங்க பூஜை


தமிழ் புத்தாண்டையொட்டி  திருச்செங்கோட்டில் 1,008 சிவலிங்க பூஜை
x
தினத்தந்தி 15 April 2022 7:19 PM GMT (Updated: 15 April 2022 7:19 PM GMT)

தமிழ் புத்தாண்டையொட்டி திருச்செங்கோட்டில் 1,008 சிவலிங்க பூஜை நடைபெற்றது

எலச்சிபாளையம்:-
தமிழ் புத்தாண்டையொட்டி திருச்செங்கோடு தேசிய சிந்தனை பேரவை சார்பில் பெரியபாவடி செங்குந்தர் திருமண மண்டபத்தில் 1,008 சிவலிங்க பூஜை நடைபெற்றது. விழாவுக்கு பேரவை தலைவர் திருநாவுக்கரசு தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் குமரவேல் முன்னிலை வகித்தார். பொருளாளர் மனோகரன் வரவேற்றார். நித்ய ஸ்ரீ சதானந்த சுவாமிகள், சதா சிவானந்த சுவாமிகள் ஆகியோர் ஆசிஉரை வழங்கினார். 21 பெண் குழந்தைகளை வரிசையாக அமர வைத்து அவர்களது பாதங்களுக்கு மஞ்சள் குங்குமம் பூசி மலர்கள் தூவி மூத்த சுமங்கலி பெண்கள் கன்னியா பூஜையை நடத்தினர். பின்னர் கண்ணாடி, சீப்பு, வளையல், மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட மங்கல பொருட்கள் வழங்கப்பட்டது. ரங்கா வித்யாலயா பள்ளி தாளாளர் சக்திவேல் நந்தி கொடியையும், பார்த்திபன் மகா தீபத்தையும் ஏற்றி வைத்தனர். பின்னர் களிமண்ணால் செய்யப்பட்ட சிவலிங்கம் மாவு உருண்டை, காசி பிரசாதம் உள்ளிட்ட 26 வகையான மங்கல பொருட்களை கொண்டு 1,008 சிவலிங்க பூஜை நடைபெற்றது. உலக அமைதி மற்றும் ஆரோக்கியத்திற்காக கூட்டு பிரார்த்தனை நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். 

Next Story