இரவு நேரத்தில் 5 மணி நேரம் மின்தடை


இரவு நேரத்தில் 5 மணி நேரம் மின்தடை
x
தினத்தந்தி 21 April 2022 10:59 AM GMT (Updated: 21 April 2022 10:59 AM GMT)

பரமக்குடியில் இரவு நேரத்தில் 5 மணி நேரம் மின்தடையால் பொதுமக்கள் கடும் அவதிஅடைந்தனர்.

பரமக்குடி, 
பரமக்குடியில் இரவு நேரத்தில் 5 மணி நேரம் மின்தடையால் பொதுமக்கள் கடும் அவதிஅடைந்தனர்.
மின்தடை
பரமக்குடி பகுதியில் கடந்த சில தினங்களாக இரவு-பகல் பாராது எந்தவித முன் அறிவிப்பும் இன்றி திடீர் திடீரென மின் தடை ஏற்படுகிறது. அதன்படி நாளொன்றுக்கு சுமார் 3 மணி நேரம் வரை மின்தடை ஏற்படுகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு 6.30 மணியில் இருந்து 11.30 மணி வரை தொடர்ந்து 5 மணி நேரம் மின்சப்ளை இன்றி பரமக்குடி நகர் மற்றும் சுற்றுப்புற பகுதி முழுவதும் இருளில் மூழ்கியது. 
இதனால் வியாபாரிகள், கைத்தறி நெசவாளர்கள், பொது மக்கள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு கடும் அவதிக்கு ஆளாகினர். தொடர்ந்து 5 மணிநேரம் ஏற்பட்ட இந்த மின்தடையால் வீடுகள் மற்றும் ஓட்டல்களில் இரவு நேர உணவுகள் தயார் செய்ய முடியாமல் பெரிதும் சிரமப்பட்டு வந்தனர். 
அதோடு கடும் வெப்பம் காரணமாக குழந்தைகளும், முதியவர்களும் புழுக்கத்தாலும் கொசுக்கடியாலும் அவதிப்பட்டனர். இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகளை தொடர்பு கொண்டால் அவர்களது செல்போன்களை தொடர்புகொள்ள முடியவில்லை என பொதுமக்கள் புகார் கூறுகின்றனர். 
நடவடிக்கை
மின்வாரிய துறையினரின் செயல்பட்டால் பொதுமக்கள் பெரும் அதிருப்திக்கு ஆளாகி உள்ளனர். அதோடு பகல் நேரங்களில் குறைந்த அழுத்த மின் வினியோகம் சப்ளை செய்யப்படுகிறது. 
இதனால் வீடுகளில் உள்ள மின்விசிறிகள், குளிர்சாதனப் பெட்டிகள் இயக்க முடியாத நிலை உள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதுகுறித்து தமிழக அரசு உரிய நடவடிக்கை மேற்கொண்டு தடையின்றி மின்சாரம் வழங்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கேட்டுக்கொண்டு உள்ளனர்.

Next Story