சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு


கரூர்
x
கரூர்
தினத்தந்தி 21 April 2022 6:30 PM GMT (Updated: 21 April 2022 6:30 PM GMT)

சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நடந்தது.

நொய்யல், 
வேலாயுதம்பாளையம் காவல்துறை சார்பில் புன்னம் பகுதியில் சைபர் கிரைம் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் பெரியசாமி தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறுகையில், ெபாதுமக்கள் தங்களது செல்போனுக்கு யாராவது வங்கியிலிருந்து அதிகாரிகள் பேசுவதாககூறி உங்கள் செல்போனுக்கு வரும் ஓடிபி நம்பரை சொல்லுங்கள் என்று சொன்னால் நீங்கள் யாரும் ஓ.டி.பி. நம்பரை சொல்ல வேண்டாம். அதேபோல் ஓடிபி மூலமாகவோ வேறு ஏதாவது வகையிலோ உங்கள் வங்கிக் கணக்கில் இருந்து மோசடியாக பணம் எடுக்கப் பட்டால் பதட்டப்படாமல் உடனடியாக சைபர் கிரைம் காவல்துறைக்கு 1930 என்ற எண்ணுக்கு முழு விவரத்துடன் தகவல் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு தகவல் தெரிவிக்கப்படும் போது உங்கள் வங்கி கணக்கில் இருந்து பணம் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளதை சைபர் கிரைம் போலீசார் அது குறித்த முழு விவரத்தையும் சேகரித்து விடுவார்கள். என்றார். இதில் போலீசார், பொதுமக்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story