மக்களின் பெரும்பாலான பிரச்சினைகள் உள்ளாட்சி பிரதிநிதிகளால் மட்டுமே நிவர்த்தி செய்ய முடியும்


மக்களின் பெரும்பாலான பிரச்சினைகள் உள்ளாட்சி பிரதிநிதிகளால் மட்டுமே நிவர்த்தி செய்ய முடியும்
x
தினத்தந்தி 23 April 2022 11:56 AM IST (Updated: 23 April 2022 11:56 AM IST)
t-max-icont-min-icon

மக்களின் பெரும்பாலான பிரச்சினைகள் உள்ளாட்சி பிரதிநிதிகளால் மட்டுமே நிவர்த்தி செய்ய முடியும் என்று அமைச்சர் கே.என்.நேரு பேசினார்.

சென்னை,  

பெருநகர சென்னை மாநகராட்சி கவுன்சிலர்களுக்கான நிர்வாக பயிற்சி முகாமை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, ரிப்பன் கட்டிட வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் தொடங்கி வைத்து, பயிற்சி கையேட்டினை வெளியிட்டார். பயிற்சி முகாமில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு ஆகியோரும் கலந்து கொண்டு கவுன்சிலர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினர்.

பயிற்சி முகாமில் அமைச்சர் கே.என்.நேரு பேசியதாவது:-

முதல்-அமைச்சரின் ஆலோசனையின்படி, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கு அவர்கள் ஆற்ற வேண்டிய பணிகள், அறிந்து கொள்ள வேண்டிய நடைமுறைகள் மற்றும் சட்டத்திட்டங்கள் குறித்து விளக்கும் வகையில் பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டுள்ளது. எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்களால் நிவர்த்தி செய்ய முடியாத மக்களின் பெரும்பாலான பிரச்சினைகள், உள்ளாட்சி பிரதிநிதிகளால் மட்டுமே நிவர்த்தி செய்ய முடியும். ஏனென்றால் பொதுமக்களின் அடிப்படை பிரச்சினைகளை நாள்தோறும் அறிந்து செயலாற்றி வருகிறீர்கள். உங்கள் பகுதியில் மக்களின் பிரச்சினைகளை அணுகி தீர்வு கண்டால் மக்களிடம் உங்களுக்கு மிகப்பெரிய மரியாதை கிடைக்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ் குமார், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி, நிலைக்குழுத் தலைவர்கள், மண்டலக் குழுத் தலைவர்கள், கவுன்சிலர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Next Story