லாரி மீது ஸ்கூட்டி மோதல்; அங்கன்வாடி அமைப்பாளர் சாவு
வந்தவாசியில் லாரி மீது ஸ்கூட்டி மோதியதில் அங்கன்வாடி அமைப்பாளர் உயிரிழந்தார்.
வந்தவாசி
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி கே.வி.டி.நகர் பகுதியை சேர்ந்தவர் குடியரசு. இவரின் மனைவி மோகனா (வயது 48), வந்தவாசி கே.வி.டி. நகர் பகுதி மையத்தில் அங்கன்வாடி அமைப்பாளராக பணியாற்றினார்.
மோகனாவும், குடியரசும் ஸ்கூட்டியில் வந்தவாசியில் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் உள்ள அங்கன்வாடி அலுவலகத்துக்கு சென்றுவிட்டு, மேல்மருவத்தூர் சாலையில் வந்து கொண்டிருந்தனர்.
அப்போது ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இருந்து நெல் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு லாரி சென்று கொண்டிருந்தது. லாரியின் பின்பக்கம் அவர்கள் ெசன்ற ஸ்கூட்டி மோதியது. அதில் மோகனா கீழே விழுந்தார்.
அவரை, மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும், சிகிச்சை பலனின்றி மோகனா பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்து வந்தவாசி தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக லாரி டிரைவர் ஆனந்த்ராஜ் கைது செய்யப்பட்டார்.
Related Tags :
Next Story