தடுப்புச்சுவர் மீது லாரி மோதி விபத்து


தடுப்புச்சுவர் மீது லாரி மோதி விபத்து
x
தினத்தந்தி 23 April 2022 5:30 PM IST (Updated: 23 April 2022 5:30 PM IST)
t-max-icont-min-icon

வாணியம்பாடி அருகே தடுப்புச்சுவர் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது.

வாணியம்பாடி

வாணியம்பாடி அருகே தடுப்புச்சுவர் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது.

ஈரோட்டில் இருந்து பாரம் ஏற்றிக்கொண்டு ஒரு லாரி சென்னையை நோக்கி வந்து கொண்டிருந்தது. வாணியம்பாடியை அடுத்த வளையாம்பட்டு தேசிய நெடுஞ்சாலையில் வரும்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ஓடிய லாரி சாலையின் மையப்பகுதியில் உள்ள தடுப்புச்சுவர் மீது மோதி விபத்துக்குள்ளானது. அதில் சாலை தடுப்பு சேதமடைந்தது.

விபத்துக்குள்ளான லாரியை ஓட்டி வந்த ஈரோடை சேர்ந்த டிரைவர் குமார் (வயது 45) லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
இந்த விபத்து குறித்து வாணியம்பாடி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story