வேலூர் கிரீன்சர்க்கிளில் குடிபோதையில் அரசு பஸ்சை மறித்து வாலிபர் கலாட்டா

வேலூர் கிரீன்சர்க்கிளில் குடிபோதையில் அரசு பஸ்சை மறித்து வாலிபர் கலாட்டா
x
தினத்தந்தி 23 April 2022 6:39 PM IST (Updated: 23 April 2022 6:39 PM IST)
t-max-icont-min-icon

வேலூர் கிரீன் சர்க்கிள் பகுதியில் வாலிபர் ஒருவர் குடிபோதையில் அரசு பஸ்சை மறித்து கலாட்டாவில் ஈடுபட்டார்.

வேலூர்

வேலூர் கிரீன் சர்க்கிள் பகுதியில் வாலிபர் ஒருவர் குடிபோதையில் அரசு பஸ்சை மறித்து கலாட்டாவில் ஈடுபட்டார்.

வேலூர் கிரீன் சர்க்கிள் பகுதி நகரின் முக்கிய பகுதியாகக் கருதப்படுகிறது. நேற்று காலை 7 மணியளவில் கிரீன் சிக்னல் பகுதியில் மதுபோதையில் வாலிபர் ஒருவர் அங்கும் இங்குமாக சுற்றித்திரிந்து கொண்டிருந்தார்.

இந்த நிலையில் அந்த வழியாக வந்த அரசு டவுன் பஸ்சை அவர் திடீரென மறைத்து சாலையில் அமர்ந்து பஸ் செல்ல முடியாதவாறு ரகளையில் ஈடுபட்டார். பஸ்சின் முன்பாக நின்று கொண்டு நகர்ந்து செல்ல மறுத்தார். இதனால் கிரீன் சர்க்கிள் பகுதியில் போக்குவரத்துப் பாதிப்பு ஏற்பட்டது. 

அந்த வழியாகச் சென்ற வாகன ஓட்டிகள் வாலிபரை அங்கிருந்து நகர்ந்து செல்லுமாறு எச்சரித்தனர். சிறிது நேர ரகளைக்கு பிறகு அந்த வாலிபர் அங்கிருந்து நகர்ந்து சென்றார். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story