மாற்றுத்திறனாளிகளுக்கு தடகள போட்டி-கலெக்டர் திவ்யதர்சினி தொடங்கி வைத்தார்
தர்மபுரியில் மாவட்ட அளவில் மாற்றுத்திறனாளிகளுக்கான தடகள போட்டியை கலெக்டர் திவ்யதர்சினி தொடங்கி வைத்தார்.
தர்மபுரி:
தர்மபுரியில் மாவட்ட அளவில் மாற்றுத்திறனாளிகளுக்கான தடகள போட்டியை கலெக்டர் திவ்யதர்சினி தொடங்கி வைத்தார்.
தடகள போட்டி
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் தர்மபுரி மாவட்ட விளையாட்டு துறையின் சார்பில் மாவட்ட அளவில் மாற்றுத்திறனாளிகளுக்கான குழு மற்றும் தடகள போட்டிகள் தர்மபுரியில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இந்த போட்டிகளை மாவட்ட கலெக்டர் திவ்யதர்சினி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
மாற்றுத்திறனாளிகளுக்கு 50 மீட்டர் ஓட்டம், 100 மீட்டர் ஓட்டம், 200 மீட்டர் ஓட்டம், 400 மீட்டர் ஓட்டம், குண்டு எறிதல், 50 மீட்டர் சக்கர நாற்காலி ஓட்டம், இலகு பந்து எறிதல், நின்ற நிலையில் தாண்டுதல், நீளம் தாண்டுதல், ஒற்றையர், இரட்டையர் இறகு பந்து போட்டி, மேசை பந்து போட்டி, அடோப்டட் வாலிபால், எறிபந்து மற்றும் கபடி போட்டி உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன.
இந்த தடகள போட்டிகளில் மாவட்டம் முழுவதிலும் இருந்து பல்வேறு வகையான மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள், மாற்றுத்திறன் கொண்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
பரிசு-சான்றிதழ்
இந்த விளையாட்டு போட்டிகளை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டு மாற்றுத்திறனாளிகளை உற்சாகப்படுத்தினர். இதில் வெற்றி பெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
இதில் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் சாந்தி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் செண்பகவள்ளி, தாசில்தார் ராஜராஜன் மற்றும் அலுவலர்கள், மாற்றுத்திறன் கொண்ட பள்ளிகளின் விளையாட்டுப்பிரிவு ஆசிரிய-ஆசிரியைகள், மாற்றுத்திறன் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story