கேரளாவுக்கு காரில் கடத்த முயன்ற 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
கேரளாவுக்கு காரில் கடத்த முயன்ற 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
குளச்சல்,
குளச்சல் இன்ஸ்பெக்டர் அருள் பிரகாஷ், சப்-இன்ஸ்பெக்டர் மோகன் ஜோஸ்லின் மற்றும் நெடுஞ்சாலை ரோந்து போலீசார் நேற்று அதிகாலையில் கோடிமுனை பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு கடற்கரையில் கேரள பதிவெண் கொண்ட ஒரு சொகுசு கார் சந்தேகத்திற்கு இடமான முறையில் நின்று கொண்டிருந்தது. போலீசார் அதன் அருகில் சென்றதும் கார் டிரைவர் இறங்கி தப்பியோடி விட்டார். பின்னர் போலீசார் காரை சோதனை செய்த போது அதில் சிறு, சிறு மூடைகளில் 1 டன் ரேஷன் அரிசி இருந்தது. விசாரணையில் இந்த அரிசி கேரளாவுக்கு கடத்தி செல்ல முயன்றது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் காருடன் அரிசி மூடைகளை பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்தனர். மேலும், தப்பியோடிய டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.
---
Related Tags :
Next Story