நுகர்வோர் மன்ற கூட்டம்


நுகர்வோர் மன்ற கூட்டம்
x
தினத்தந்தி 23 April 2022 9:29 PM IST (Updated: 23 April 2022 9:29 PM IST)
t-max-icont-min-icon

டாக்டர் சிவந்தி ஆதித்தனார் கல்வியியல் கல்லூரியில் நுகர்வோர் மன்ற கூட்டம் நடந்தது.

திருச்செந்தூர்:
திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் கல்வியியல் கல்லூரியில் குடிமக்கள் நுகர்வோர் மன்ற கூட்டம் நடந்தது. கல்லூரி உதவி பேராசிரியரும், நுகர்மன்ற கழக ஒருங்கிணைப்பாளருமான சுந்தர் கணேஷ் வரவேற்றார். ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் பொருளாதாரத்துறை உதவி பேராசிரியர் சிவமுருகன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, நுகர்வோர் உரிமைகளையும், சட்டங்களையும் எடுத்துரைத்தார். நாம் வாங்கும் பொருட்களில் 7 முக்கியமான விதிகளை நினைவில் கொண்டு தரமான பொருட்கள் வாங்க வேண்டும் என்றும், நாம் எவ்வாறு விழிப்புடன் செயல்பட வேண்டும் என்றும் எடுத்துரைத்தார். கல்லூரி முதல்வர் பொ.சுவாமிதாஸ் வாழ்த்தி பேசினார். நுகர்மன்ற மாணவ செயலாளர் சிவராமன் நன்றி கூறினார்.

Next Story