வழிப்பறியில் ஈடுபட்டவர்களுக்கு ஜாமீன் கையெழுத்து போட்ட 4 பேருக்கு அபராதம்


வழிப்பறியில் ஈடுபட்டவர்களுக்கு ஜாமீன் கையெழுத்து போட்ட 4 பேருக்கு அபராதம்
x
தினத்தந்தி 23 April 2022 9:34 PM IST (Updated: 23 April 2022 9:34 PM IST)
t-max-icont-min-icon

ஓட்டப்பிடாரம் அருகே வழிப்பறியில் ஈடுபட்டவர்களுக்கு ஜாமீன் கையெழுத்து போட்ட 4 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

ஓட்டப்பிடாரம்:
ஓட்டப்பிடாரம் அருகே வழிப்பறியில் ஈடுபட்டவர்களுக்கு ஜாமீன் கையெழுத்து போட்ட 4 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

வழிப்பறி வழக்கு
ஓட்டப்பிடாரம் தாலுகா புளியம்பட்டி பகுதியில் கடந்த 2017-ம் ஆண்டு வேன் டிரைவரிடம் வழிப்பறி செய்த வழக்கில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 4 பேர் மீது புளியம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் அவர்கள் 4 பேருக்கும் கோவில்பட்டி இளம்புவனம் பகுதியைச் சேர்ந்த மாரீஸ்வரி (வயது 48), இருள் அம்மாள் (50), லட்சுமி (62) மற்றும் ஆவல்நத்தம் கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணசாமி (67) ஆகிய 4 பேரும் ஜாமீன் கையெழுத்து போட்டுள்ளனர். மேலும் இந்த சம்பவம் குறித்து கோவில்பட்டி மாஜிஸ்திரேட்டு-1 கோர்ட்டில் வழக்கு நடந்து வந்தது.

அபராதம் விதிப்பு
இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 4 பேரும் கோர்ட்டில் ஆஜராகாமல் இருந்து வந்தனர். இதையடுத்து அவர்கள் 4 பேருக்கும் கடந்த 31.8.2021 அன்று கோவில்பட்டி மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு பிடியாணை பிறப்பித்து உத்தரவிட்டது.
தொடர்ந்து அதன் பின்னரும் பீகார் மாநிலத்தை சேர்ந்த 4 பேரும் கோர்ட்டில் ஆஜராகவில்லை.
இந்தநிலையில் அவர்களுக்கு ஜாமீன் கையெழுத்து போட்ட மாரீஸ்வரி, இருள் அம்மாள், லட்சுமி மற்றும் கிருஷ்ணசாமி ஆகியோர் கோர்ட்டில் ஆஜராக மாஜிஸ்திரேட்டு பாரதிதாசன் உத்தரவு பிறப்பித்தார். அதன்படி கோர்ட்டில் ஆஜரான 4 பேருக்கு தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தும், மேலும் இவர்கள் மீது கோவில்பட்டி கிழக்கு போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யவும் நீதிபதி உத்தரவிட்டார்.

Next Story