இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி


இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி
x
தினத்தந்தி 23 April 2022 9:44 PM IST (Updated: 23 April 2022 9:44 PM IST)
t-max-icont-min-icon

உடன்குடியில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடந்தது.

உடன்குடி:
உடன்குடியில் தமிழ்நாடு நுகர்வோர் பேரவையின் திருச்செந்தூர் வட்டார கிளை சார்பாக இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடந்தது. பேரவையின் நிறுவன தலைவர் மோகனசுந்தரம் தலைமை தாங்கினார். தூத்துக்குடி மாவட்ட கவுரவ ஆலோசகர் சுந்தர் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக அரசு வக்கீல் சாத்ராக் கலந்து கொண்டார். திருச்செந்தூர் வட்டார தலைவர் ரகுமத்துல்லா. திருச்செந்தூர் நகரத்தலைவர் மணிமாறன், பொறுப்பாளர் பார்த்திபன், குலசேகரன்பட்டினம் நகர ஆலோசகர் ஆறுமுகராஜா, வீரபாண்டியன்பட்டினம் பொறுப்பாளர் அந்தோணி உள்பட பலர் கலந்துகொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை வட்டார தலைவர் ரகுமத்துல்லா செய்திருந்தார்.

Next Story