‘தினத்தந்தி’ புகார் பெட்டி


‘தினத்தந்தி’ புகார் பெட்டி
x
தினத்தந்தி 23 April 2022 10:07 PM IST (Updated: 23 April 2022 10:07 PM IST)
t-max-icont-min-icon

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

‘தினத்தந்தி’க்கு நன்றி
 
திண்டுக்கல்-சிலுவத்தூர் சாலையில் கோவிலூர் பிரிவில் பொருத்தப்பட்டு இருக்கும் கண்காணிப்பு கேமரா பழுதானது பற்றி ‘தினத்தந்தி’யின் புகார்பெட்டி பகுதியில் செய்தி வெளியானது. இதையடுத்து கண்காணிப்பு கேமரா சரிசெய்யப்பட்டது. இதற்காக ‘தினத்தந்தி’க்கும், நடவடிக்கை எடுத்து அதிகாரிகளுக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். -லிங்கம், கஸ்தூரிநாயக்கன்பட்டி.

பஸ்நிறுத்தத்தில் தேங்கிய மழைநீர் 

தேனி ராசிங்கபுரம் பஸ்நிறுத்தத்தில் சாரல் மழை பெய்தால் கூட, மழைநீர் தேங்கி விடுகிறது. வாகனங்கள் மழைநீரில் மிதந்தபடி செல்ல வேண்டியது இருக்கிறது. மேலும் பொதுமக்கள் நடந்து கூட செல்ல முடியவில்லை. எனவே மழைநீர் தேங்காமல் வடிந்து செல்வதற்கு வடிகால் வசதி செய்து தரவேண்டும். -அழகர், ராசிங்கபுரம்.

தூர்வாராத சாக்கடை கால்வாய்

திண்டுக்கல்லை அடுத்த பெரியபள்ளப்பட்டி 9-வது வார்டு பிஸ்மிநகரில் சாக்கடை கால்வாய்கள் முறையாக தூர்வாரப்படுவது இல்லை. இதனால் கழிவுநீர் செல்லாமல் தேங்கி நின்று துர்நாற்றம் வீசுகிறது. எனவே சாக்கடை கால்வாய்களை முழுமையாக தூர்வார வேண்டும். -அப்பாஸ்அலி, பிஸ்மிநகர்.

குப்பைகள் அகற்றப்படுமா? 

திண்டுக்கல் மாசிலாமணிபுரத்தில் மாதா ஆலயம் அருகே குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. அந்த வழியாக மக்கள் நடந்து செல்ல முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசுகிறது. எனவே குப்பைகளை அகற்றுவதோடு, இனிமேல் யாரும் குப்பைகளை கொட்டாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். -அன்பு, திண்டுக்கல்.

Next Story