விபத்தில்லா தமிழகம் திட்டத்தில் 50,552 பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர்; அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி


விபத்தில்லா தமிழகம் திட்டத்தில் 50,552 பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர்; அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி
x
தினத்தந்தி 23 April 2022 10:12 PM IST (Updated: 23 April 2022 10:12 PM IST)
t-max-icont-min-icon

முதல்-அமைச்சர் கொண்டு வந்த விபத்தில்லா தமிழகம் திட்டத்தில் 3 மாதத்தில் 50 ஆயிரத்து 552 உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளதாக சோளிங்கரில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட தொடக்க விழாவில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

சோளிங்கர்

முதல்-அமைச்சர் கொண்டு வந்த விபத்தில்லா தமிழகம் திட்டத்தில் 3 மாதத்தில் 50 ஆயிரத்து 552 உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளதாக சோளிங்கரில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட தொடக்க விழாவில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

வருமுன் காப்போம் திட்ட முகாம்

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் கலைஞரின் வரும் முன் காப்போம் திட்டசிறப்பு மருத்துவ முகாம் தொடக்க விழா நடந்தது. நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்ரமணியன், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி, அரக்கோணம் ஜெகத்ரட்சகன் எம்.பி., சோளிங்கர்  முனிரத்தினம் எம்.எல்.ஏ.ஆகியோர் கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்தனர்.

நிகழ்ச்சியில் பங்கேற்ற கர்ப்பிணிகளுக்கு மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் ஊட்டச்சத்து பெட்டகம் மற்றும் இல்லம் தேடி மருத்துவம் பெட்டகங்களை அமைச்சர்கள்  வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து ரூ.1 கோடியே 25 லட்சம் மதிப்பில் 4 துணை சுகாதார நிலையம் மற்றும் செவிலியர்களுக்கான குடியிருப்பகளை மா.சுப்ரமணி திறந்து ைவத்தார். 

விழாவில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசுகையில், 2006-ம் ஆண்டு தமிழகத்தின் முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற கலைஞர் நகர்ப்புற மற்றும் கிராமப்புற மக்களின் பயன்பாட்டிற்காக வருமுன் காப்போம் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

ஆனால் அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் 10 ஆண்டு காலமாக இத்திட்டம் கிடப்பில் போட்டு விட்டது. தி.மு.க.அரசு மீண்டும் பொறுப்பேற்றதும் முதல்-அமைச்சர் முக ஸ்டாலின், அதற்கு கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் என பெயர் சூட்டி செயல்படுத்தி வருகிறார்.

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், தற்போது தொடங்கி வைத்த விபத்தில்லா தமிழகம் திட்டத்தின்கீழ் தமிழகம் முழுவதும் 3 மாதத்தில் மட்டும் 50 ஆயிரத்து 552 பேர் சாலை விபத்துகளில் இருந்து  காப்பாற்றப்பட்டுள்ளனர். இத்திட்டம் அறிவிக்காமல் இருந்தால் இவ்வளவு உயிர்கள் நாம் இழந்திருப்போம் என்றார்.

பேட்டி

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணி கூறியதாவது:-
ஒன்றிய அரசின் மருத்துவ திட்டங்கள் அனைத்தையும் செய்யக்கூடிய முதன்மை மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. தடுப்பூசி போடப்பட்டதால் பாதிக்கப்பட்டதாக கூறப்படும்  சோளிங்கர் சேர்ந்த இரு மாணவிகளுக்கு தமிழக அரசு சார்பில் அனைத்து நலத்திட்ட உதவிகளும் வழங்கப்படும்.

தமிழகத்தில் புதிய வகையான எக்ஸ் இ வைரஸ் தொற்றின் அறிகுறிகள் எதுவும் இல்லை, தற்போது தமிழகத்தில் ் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை உயர்வுக்கு வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள்தான் காரணம் ஆகையால் தமிழகத்தில் வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த முழுவீச்சில் மருத்துவ பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story