புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் கைது


புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் கைது
x
தினத்தந்தி 23 April 2022 10:19 PM IST (Updated: 23 April 2022 10:19 PM IST)
t-max-icont-min-icon

கடைகளில் புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஊத்தங்கரை:
சாமல்பட்டி போலீசார் கே.பாப்பாரப்பட்டி பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு ஒரு கடையில் சோதனை செய்த போது தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்றது தெரிய வந்தது. இது தொடர்பாக செந்தில்குமார் (வயது 54) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
இதேபோன்று ஊத்தங்கரை போலீசார் கல்லூர் பகுதியில் ஒரு கடையில் சோதனை செய்தபோது தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனைக்கு வைத்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து கடை உரிமையாளர் பெருமாள் (52) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

Next Story