மருதூரில் கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்ட குழாய் உடைப்பை சரி செய்யும் பணி மும்முரம்
‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியாக மருதூரில் கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்ட குழாய் உடைப்பை சரி செய்யும் பணி இரவு, பகலாக மும்முரமாக நடைபெற்று வருகிறது
வாய்மேடு:
‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியாக மருதூரில் கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்ட குழாய் உடைப்பை சரி செய்யும் பணி இரவு, பகலாக மும்முரமாக நடைபெற்று வருகிறது.
குடிநீர் குழாயில் உடைப்பு
வாய்மேட்டை அடுத்த மருதூர் கடைத்தெரு பகுதியில் வேதாரண்யம் - திருத்துறைப்பூண்டி சாலையில் கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்ட குழாயில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு உடைப்பு ஏற்பட்டது. இதனால் வேதாரண்யம் ஒன்றியத்தில் உள்ள 36 ஊராட்சி பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை இருந்து வந்தது.
இந்த குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்ய வேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்த செய்தி ‘தினத்தந்தி’ நாளிதழில் படத்துடன் வெளிவந்தது.
சரி செய்யும் பணி மும்முரம்
இதன் எதிரொலியாக கொள்ளிடம் கூட்டுக்குடிநீர் திட்ட உதவி நிர்வாக பொறியாளர் ராமசாமி, உதவி பொறியாளர் விவேகானந்தன் மற்றும் அதிகாரிகள் கடந்த 21-ந்தேதி சம்பவ இடத்துக்கு சென்று பணியாளர்கள் மூலம் குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து 3 நாட்களாக இரவு, பகலாக உடைப்பை சரி செய்யும் பணியில் பணியாளா்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
சீராக குடிநீர் வழங்கப்படும்
இந்த பணியை குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர் சண்முகசுந்தரம் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது நாளை(இன்று) முதல் பொதுமக்களுக்கு சீராக குடிநீர் வழங்கப்படும் என்றார். இந்த ஆய்வின் போது கூட்டுறவு வங்கி இயக்குனர் உதயம் முருகையன் உள்பட பலர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story