தேய்பிறை அஷ்டமியையொட்டி காலபைரவர் கோவில்களில் சிறப்பு பூஜை பூசணியில் விளக்கேற்றி பக்தர்கள் வழிபாடு

தேய்பிறை அஷ்டமியையொட்டி  காலபைரவர் கோவில்களில் சிறப்பு பூஜை பூசணியில் விளக்கேற்றி பக்தர்கள் வழிபாடு
x
தினத்தந்தி 23 April 2022 10:19 PM IST (Updated: 23 April 2022 10:19 PM IST)
t-max-icont-min-icon

தேய்பிறை அஷ்டமியையொட்டி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள காலபைரவர் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பூசணியில் விளக்கேற்றி வழிபட்டனர்.

கிருஷ்ணகிரி:
தேய்பிறை அஷ்டமியையொட்டி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள காலபைரவர் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பூசணியில் விளக்கேற்றி வழிபட்டனர்.
தேய்பிறை அஷ்டமி
கிருஷ்ணகிரி அருகே கல்லுக்குறிக்கி பெரியஏரி மேற்கு கோடியில் உள்ள பழமை வாய்ந்த காலபைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமியையொட்டி நேற்று சிறப்பு பூஜைகள் நடந்தன. தொடர்ந்து கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், மகாலட்சுமி ஹோமம், காலபைரவ மகா ஹோமம், காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தன.
பின்னர் காலபைரவர் உற்சவமும், பரணி தீபம் ஏற்றும் நிகழ்ச்சியும் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பூசணியில் விளக்கேற்றி வழிபட்டனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
சிறப்பு பூஜை
இதேபோல், கிருஷ்ணகிரி அடுத்த சூரன்குட்டையில் உள்ள தட்சண காலபைரவர் கோவில், கந்திகுப்பம் காலபைரவர் கோவில் மற்றும் மாவட்டத்தில் உள்ள காலபைரவர் கோவில்களில் தேய்பிறை அஷ்டமியையொட்டி சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடந்தன. இதில்  ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Next Story