தேன்கனிக்கோட்டை அருகே சிக்கம்மா, தொட்டம்மா கோவில் திருவிழா தலை மீது தேங்காய் உடைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்
தேன்கனிக்கோட்டை அருகே சிக்கம்மா, தொட்டம்மா கோவில் திருவிழாவில் தலை மீது தேங்காய் உடைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
தேன்கனிக்கோட்டை:
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள பிக்கனப்பள்ளி கிராமத்தில் பழமை வாய்ந்த சிக்கம்மா, தொட்டம்மா கோவில் திருவிழா கடந்த 22-ந்தேதி தொடங்கியது. விழாவையொட்டி நேற்று தமிழகம், கர்நாடகம் மற்றும் பல்வேறு இடங்களில் இருந்து 50 சாமிகள் அலங்கரித்து எடுத்து வரப்பட்டது. பின்னர் சாமிகளுக்கு கங்கை பூஜை செய்யப்பட்டது. எருதுகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு ஊர்வலமாக கொண்டு வந்தனர். தொடர்ந்து பக்தர்கள் தலை மீது தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தலை மீது தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். ஞாயிற்றுக்கிழமை சாமிகள் ஊஞ்சல் உற்சவம், இரவு சிக்கம்மா, தொட்டம்மா பல்லக்கு ஊர்வலம் நடைபெறுகிறது. திங்கட்கிழமை எருதுகள் பூஜை, அனைத்து சாமிகள் மடங்களுக்கு செல்லும் கூட்டத்தை கலைக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
Related Tags :
Next Story