ஓடும் வேனில் ‘திடீர்’ தீ 9 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்


ஓடும் வேனில் ‘திடீர்’ தீ 9 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்
x
தினத்தந்தி 24 April 2022 12:15 AM IST (Updated: 23 April 2022 10:22 PM IST)
t-max-icont-min-icon

தஞ்சை அருகே ஓடும் வேனில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதில் 9 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

வல்லம்:-

தஞ்சை அருகே ஓடும் வேனில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதில் 9 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். 

தீப்பற்றி எரிந்த வேன்

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள மதுக்கூரில் இருந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பெண்கள், 6 ஆண்கள் என 9 பேர் தங்களுடைய உறவினரை வெளிநாட்டுக்கு வழி அனுப்புவதற்காக திருச்சி விமான நிலையத்துக்கு ஆம்னி வேனில் சென்று கொண்டிருந்தனர்.
தஞ்சை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் புதுக்குடி அருகே காமாட்சிபுரம் அருகே சென்று கொண்டிருந்தபோது ஆம்னி வேனில் இருந்து புகை வந்துள்ளது. உடனடியாக வேன் டிரைவர் மதுக்கூரை சேர்ந்த சக்திவேல்(வயது 23) என்பவர் வேனை சாலையோரம் நிறுத்தினார். அதற்குள் தீ மளமளவென பற்றி எரியத்தொடங்கியது. இதில் ஆம்னி வேன் முற்றிலும் எரிந்து நாசமானது. 

9 பேர் உயிர் தப்பினர்

புகை வருவதை கவனித்து டிரைவர் வேனை உடனடியாக நிறுத்தியதால் வேனில் இருந்த 9 பேரும் கீழே இறங்கி, அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். சாலையில் எரிந்து கொண்டிருந்த வேனை திருக்காட்டுப்பள்ளியில் இருந்து வந்த தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர். 
இதுகுறித்து செங்கிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Next Story