லாரி மீது கார் மோதல்
வேடசந்தூர் அருகே லாரி மீது கார் மோதிய விபத்தில் டிரைவர் படுகாயம் அடைந்தார்.
வேடசந்தூர்:
தூத்துக்குடியில் இருந்து கரி மூட்டைகளை ஏற்றிக்கொண்டு கரூருக்கு லாரி ஒன்று புறப்பட்டது. அந்த லாரியை, தூத்துக்குடியை சேர்ந்த மாடசாமி (வயது 31) ஓட்டி வந்தார். திண்டுக்கல்-கரூர் நான்கு வழிச்சாலையில், வேடசந்தூர் அருகே உள்ள விருதலைப்பட்டி என்னுமிடத்தில் நேற்று காலை லாரி சென்று கொண்டிருந்தது.
அப்போது கேரளா மாநிலம் கோட்டையத்தில் இருந்து பெங்களூர் நோக்கி சென்ற கார், முன்னால் சென்ற லாரியின் பின்பகுதியில் பயங்கரமாக மோதியது. இதில் காரின் முன்பகுதி லாரிக்குள் புகுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் காரை ஓட்டி வந்த அமுல் (வயது 32) என்பவர் இடிபாடுகளில் சிக்கி கொண்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த நெடுஞ்சாலை ரோந்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுப்புராஜ், ஏட்டு சாமிநாதன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பின்னர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன், காரில் சிக்கிய அமுலை மீட்டு சிகிச்சைக்காக வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து கூம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story