வாலிபரை கொன்று உடலை முட்புதரில் வீச்சு; மர்மநபர்களுக்கு வலைவீச்சு


வாலிபரை கொன்று உடலை முட்புதரில் வீச்சு; மர்மநபர்களுக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 23 April 2022 10:26 PM IST (Updated: 23 April 2022 10:26 PM IST)
t-max-icont-min-icon

கடூர் தாலுகாவில் வாலிபரை கொன்று உடலை முட்புதரில் வீசிய பயங்கர சம்பவம் நடந்துள்ளது. இதுபற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சிக்கமகளூரு: கடூர் தாலுகாவில் வாலிபரை கொன்று உடலை முட்புதரில் வீசிய பயங்கர சம்பவம் நடந்துள்ளது. இதுபற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

வாலிபர் படுகொலை

சிக்கமகளூரு மாவட்டம் கடூர் தாலுகா சக்கராயப்பட்டணா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட திப்பேகொண்டனஹள்ளி கிராமத்தில் உள்ள ஒரு புதரில் அடையாளம் தெரியாத ஆண் பிணம் ஒன்று கிடந்தது. 
இதுபற்றி சக்கராயப்பட்டணா போலீசாருக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர். அப்போது 30 வயது மதிக்கத்தக்க ஒரு வாலிபர் படுகொலை செய்யப்பட்டு அவரது உடல் அங்கு வீசப்பட்டு இருந்தது போலீசாருக்கு தெரியவந்தது. 

மேலும் உடலை சாக்குப்பையால் போர்த்தி அதன் மீது முட்களை அடுக்கி வைத்துவிட்டு சென்றிருந்ததும் தெரியவந்தது. ஆனால் அவர் யார்?, எந்த ஊரைச் சேர்ந்தவர்? போன்ற எந்த விவரங்களும் போலீசாருக்கு உடனடியாக தெரியவில்லை. 

தீவிர விசாரணை

இதையடுத்து போலீசார் அந்த வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மாவட்ட அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். மர்ம நபர்களையும் வலைவீசி தேடிவருகிறார்கள். 


Next Story