லட்சுமணன் எம்.எல்.ஏ. சென்ற கார் மீது சரக்கு வாகனம் மோதல்


லட்சுமணன் எம்.எல்.ஏ. சென்ற கார் மீது சரக்கு வாகனம் மோதல்
x
தினத்தந்தி 23 April 2022 10:55 PM IST (Updated: 23 April 2022 10:55 PM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் அருகே லட்சுமணன் எம்.எல்.ஏ. சென்ற கார் மீது சரக்கு வாகனம் மோதியது. இதில் அவர் காயமின்றி உயிர் தப்பினார்.

விழுப்புரம், 

விழுப்புரம் அருகே சாலை அகரத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நேற்று பள்ளி மேலாண்மைக்குழு மறு கூட்டமைப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொள்வதற்காக நேற்று காலை விழுப்புரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் ஆர்.லட்சுமணன், விழுப்புரம் பானாம்பட்டு சாலையில் உள்ள தனது வீட்டில் இருந்து காரில் புறப்பட்டார். சாலைஅகரம் அருகில் செல்லும்போது பின்னால் விழுப்புரத்தில் இருந்து வளவனூர் நோக்கிச்சென்ற சரக்கு வாகனம் திடீரென அந்த கார் மீது மோதியது. இந்த விபத்தில் காரின் பின்பக்கம் பலத்த சேதமடைந்தது. இதில் டாக்டர் லட்சுமணன் எம்.எல்.ஏ. காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

Next Story