நாமக்கல் அரசு பெண்கள் கல்லூரியில் வரலாற்று துறை மாணவிகளின் கலைநிகழ்ச்சி

நாமக்கல் அரசு பெண்கள் கல்லூரியில் வரலாற்று துறை மாணவிகளின் கலைநிகழ்ச்சி
x
தினத்தந்தி 23 April 2022 11:04 PM IST (Updated: 23 April 2022 11:04 PM IST)
t-max-icont-min-icon

நாமக்கல் அரசு பெண்கள் கல்லூரியில் வரலாற்று துறை மாணவிகளின் கலைநிகழ்ச்சி

நாமக்கல்:
நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு பெண்கள் கல்லூரியில் நேற்று வரலாற்று துறை சார்பில் கலைவிழா கொண்டாடப்பட்டது. கல்லுாரி முதல்வர் பாரதி தலைமை தாங்கினார். உதவி பேராசிரியர் மினி வரவேற்றார். வரலாற்று துறை தலைவர் பத்மாவதி முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியை முன்னிட்டு மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடந்தது. மாணவிகள் கிராமிய, தேசபக்தி பாடல்களுக்கு நடனமாடி பார்வையாளர்களை கவர்ந்தனர். குறிப்பாக மாணவிகள் கொடிகாத்த குமரனின் நாடகத்தை அரங்கேற்றி, பார்வையாளர்களின் கைத்தட்டலை பெற்றனர். இதில் துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவிகள் கலந்து கொண்டனர்.

Next Story