நாமக்கல் நகராட்சியில் வளர்ச்சி பணிகளை கலெக்டர் ஸ்ரேயா சிங் ஆய்வு


நாமக்கல் நகராட்சியில் வளர்ச்சி பணிகளை கலெக்டர் ஸ்ரேயா சிங் ஆய்வு
x
தினத்தந்தி 23 April 2022 11:04 PM IST (Updated: 23 April 2022 11:04 PM IST)
t-max-icont-min-icon

நாமக்கல் நகராட்சியில் வளர்ச்சி பணிகளை கலெக்டர் ஸ்ரேயா சிங் ஆய்வு

நாமக்கல்:
நாமக்கல் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகளை கலெக்டர் ஸ்ரேயா சிங் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கலெக்டர் ஆய்வு
தமிழ்நாடு அரசு பொதுமக்கள் இணையதளம் மூலம் தங்களுக்கு தேவையான சான்றிதழ்கள் மற்றும் சேவைகளை பெற வழிவகை செய்துள்ளது. அரசின் இ-சேவை மையம் மூலமாக இணையதளம் வாயிலாக வருவாய்த்துறையின் மூலம் வழங்கப்படும் வாரிசு சான்றிதழ், சாதி சான்றிதழ், விதவை சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், வருமான சான்றிதழ் உள்ளிட்ட 22 வகையான சான்றிதழ்கள் கேட்டு விண்ணப்பித்தல் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை எளிதாக்கி உள்ளது.
அதன் அடிப்படையில், நாமக்கல் தாசில்தார் அலுவலகத்தில் தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவன பொது இ-சேவை மையத்தில் வாரிசு சான்றிதழ், சாதி சான்றிதழ், விதவை சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், வருமான சான்றிதழ் பதிவேற்றம் செய்த பதிவுகளின் விவரங்களை மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஏரி தூர்வாரும் பணி
பின்னர், அவர் கலைஞரின் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் முல்லை நகரில் கட்டப்பட்டு வரும் ஒருங்கிணைந்த நூலக கட்டிட பணியினை நேரில் பார்வையிட்டு, நகராட்சி ஆணையாளரிடம் பணிகளை விரைந்து முடிக்கும்படி வலியுறுத்தினார். அதனைத்தொடர்ந்து, நாமக்கல் நகராட்சிக்கு உட்பட்ட கொசவம்பட்டி, நல்லிபாளையம் கங்குனிக்குட்டை, கருப்பட்டிபாளையம் ஆகிய ஏரிகளை தூர்வரும் பணிகளை மாவட்ட கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கருப்பட்டிபாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி பகுதியில் இல்லம் தேடி கல்வி திட்டத்தின் கீழ் தன்னார்வாலர்கள் தங்களது பகுதியில் உள்ள பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மாலை நேரங்களில் பயிற்சி வழங்குவதை கலெக்டர் பார்வையிட்டார்.
இந்த ஆய்வின் போது தாசில்தார்கள் திருமுருகன், சக்திவேல் நாமக்கல் நகராட்சி ஆணையாளர் சுதா, நகராட்சி பொறியாளர் சுகுமார் உள்பட அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Next Story