மதுரை மீனாட்சி அம்மன் கோவில் யானைக்கு குளியல் தொட்டி
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் யானை மன அழுத்தத்தை குறைக்கும் வகையில் குளியல் தொட்டி கட்டப்பட்டு வருகிறது.
மதுரை,
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் யானை மன அழுத்தத்தை குறைக்கும் வகையில் குளியல் தொட்டி கட்டப்பட்டு வருகிறது.
பார்வை குறைபாடு
உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பார்வதி (வயது 25) என்ற யானை உள்ளது. இந்த யானைக்கு கடந்த ஆண்டு கண்ணில் வெண்புரை ஏற்பட்டு பார்வை குறைபாடு ஏற்பட்டு வந்தது. இதற்காக கால்நடை மருத்துவ நிபுணர்கள் குழுவினர் சிறப்பு தொடர் சிகிச்சை வழங்கி வருகிறார்கள்.
இதனால் சிகிச்சையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து யானையின் மன அழுத்தத்தை போக்கும் விதமாக குளித்து விளையாடும் வகையில் குளியல் தொட்டி அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி மீனாட்சி அம்மன் கோயில் யானை பார்வதிக்கு சிறப்பு குளியல் தொட்டி அமைக்க பல்வேறு இடங்கள் பரிசீலிக்கப்பட்டு வந்தன.
இதைத்தொடர்ந்து கோவிலில் கடந்த சில தினங்களுக்கு முன்பு யானை பராமரிக்கப்பட்டு வரும் யானை மகால் பகுதியில் குளியல் தொட்டி அமைப்பது என முடிவு எடுக்கப்பட்டது. இதற்காக ரூ.23½ லட்சமும் ஒதுக்கப்பட்டு குளியல் தொட்டி அமைப்பதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
உத்தரவு
மேலும் கோடை வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வரும் சூழ்நிலையில், வரவிருக்கும் அக்னி நட்சத்திரத்தை சமாளிக்கும் பொருட்டுப் பார்வதி யானையின் உடல் உஷ்ணத்தை குறைத்து மன அழுத்தத்தை போக்கும் வகையில், குளியல் தொட்டி அமைக்கும் பணி விரைவில் முடிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story