780 கிலோ புகையிலை பொருட்களுடன் 3 பேர் கைது
780 கிலோ புகையிலை பொருட்களுடன் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
மேலூர்,
மதுரை மாவட்டத்தில் சட்டவிரோதமாக புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்வோருக்கு எதிராக சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் உத்திரவிட்டு உள்ளார். அதன்படி மதுரை மாவட் டத்தில் போதைப் பொருட்களை பதுக்குதல், கடத்தல் மற்றும் விற்பனை போன்றவற்றை கட்டுப்படுத்த தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர ரோந்து பணி நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் மேலூர் அருகே திருவாதவூர் பகுதியில் நடத்திய தேடுதல் வேட்டையில் புகையிலை பொருட்கள் பதுக்கிவைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக மேலூர் அருகில் உள்ள திருவாதவூரை சேர்ந்த வேலாயுதம் (வயது47), சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் பகுதியை சேர்ந்த முரளி (34) மற்றும் அருண்குமார் (24) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.10 லட்சம் மதிப்புள்ள 780 கிலோ புகையிலைப் பொருட்களையும், 2 கார்கள், ஒரு மினி லோடு வேன் மற்றும் 3 இரு சக்கர வாகனங்கள் ஆகியவற்றை மேலூர் போலீசார் பறிமுதல் செய்தனர். சிறப்பாக பணி யாற்றிய தனிப்படையினரை மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் பாராட்டினார். மேலும், மதுரை மாவட்டத்தில் சட்டவிரோதமாக கஞ்சா, புகையிலை விற்பனை ஈடுபடுவோர், பதுக்குவோர் மற்றும் கடத்தலில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப் படும். மேலும் புகையிலை பொருட்களை பயன்படுத்து வதால் சமுதாயத்தில் ஏற்படும் சீரழிவுகளை தடுக்க ஏதுவாக அதுகுறித்த தகவல்களை உடனடியாக பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் கேட்டுக் கொண்டுள்ளார்.
Related Tags :
Next Story