தடுப்புக்காவல் சட்டத்தில் கஞ்சா வியாபாரி கைது
தடுப்புக்காவல் சட்டத்தில் கஞ்சா வியாபாரி கைது செய்யப்பட்டாா்.
மூங்கில்துறைப்பட்டு,
மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள அருளம்பாடி பகுதியை சேர்ந்தவர் பாபு என்கிற அந்தோணிசாமி (வயது 58). இவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக கூறி, மூங்கில்துறைப்பட்டு போலீசார் கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், தொடர்ந்து அவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுவந்ததால், இதை தடுக்கும் வகையில் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார் கலெக்டர் ஸ்ரீ்தருக்கு பரிந்துரை செய்தார்.
இதையடுத்து அவர், பாபுவை தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார். இதற்கான உத்தரவு நகல் கடலூர் சிறையில் உள்ள பாபுவிடம் சிறை அலுவலர்கள் மூலம் போலீசார் வழங்கினர்.
Related Tags :
Next Story