16 சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது
16 சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
கரூர்,
கரூர் நெரூர் தென்பாகம் பகுதியை சேர்ந்தவர் டேவிட் தீனா (வயது 22). கூலி தொழிலாளி. இவருக்கும், 16 வயது நிரம்பிய 11-ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவிக்கும் முகநூல் மூலம் அறிமுகமாகி பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் டேவிட் தீனா அந்த சிறுமியை காதலிப்பதாக கூறி உள்ளார். இந்தநிலையில் நேற்று முன்தினம் சிறுமியின் வீட்டிற்கு சென்று அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இதுகுறித்து சிறுமியின் தாய் கரூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ரூபி வழக்குப்பதிந்து, டேவிட் தீனாவை போக்சோ சட்டத்தில் கைது செய்து கரூர் கிளை சிறையில் அடைத்தார்.
Related Tags :
Next Story