முககவசம் அணியாவிட்டால் ரூ.500 அபராதம்


முககவசம் அணியாவிட்டால் ரூ.500 அபராதம்
x
தினத்தந்தி 23 April 2022 11:54 PM IST (Updated: 23 April 2022 11:54 PM IST)
t-max-icont-min-icon

முககவசம் அணியாவிட்டால் ரூ.500 அபராதம விதிக்கப்படும் என ராமநாதபுரம் கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொது இடங்களில் முககவசம் அணியாதவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்பட உள்ளது. முககவசம் அணிவது தொடர்பாக நாளை(திங்கட்கிழமை) முதல் தீவிரமாக கண்காணிக்கப்படும். உள்ளாட்சித் துறை, காவல்துறை, வருவாய்த்துறை அலுவலர்களை ஒருங்கிணைத்து கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்படவுள்ளது.
மேலும் பொதுமக்கள் தவறாது கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கி இருக்கும் சூழ்நிலையில், தமிழக அரசு வழங்கியுள்ள கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும் என மாவட்ட கலெக்டர் சங்கர்லால் குமாவத் தெரிவித்துள்ளார்.


Next Story