ஸ்ரீபுரம் நாராயணி மருத்துவமனையில் உங்களைத் தேடி எங்கள் மருத்துவம் திட்டம் தொடக்கம்
வேலூர் நாராயணி மருத்துவமனையில் உங்களை தேடி எங்கள் மருத்துவம் புதிய திட்டம் தொடங்கப்பட்டது.
வேலூர்
வேலூர் நாராயணி மருத்துவமனையில் உங்களை தேடி எங்கள் மருத்துவம் புதிய திட்டம் தொடங்கப்பட்டது.
வேலூரை அடுத்த ஸ்ரீபுரம் நாராயணி மருத்துவமனை சார்பில் ‘‘உங்களை தேடி எங்கள் மருத்துவம்’’ என்ற புதிய திட்ட தொடக்க விழா நடந்தது. நாராயணி மருத்துவமனை குழும இயக்குனர் டாக்டர் பாலாஜி தலைமை தாங்கினார். மருத்துவ கண்காணிப்பாளர் தமிழரசி முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளர்களாக கார்த்திகேயன் எம்.எல்.ஏ., மாநகராட்சி மேயர் சுஜாதா ஆகியோர் கலந்து கொண்டு திட்டத்தை தொடங்கி வைத்து பேசினர். அப்போது மருத்துவ குறிப்புகள் அடங்கிய கையேடும் வெளியிடப்பட்டது.
பின்னர் இதுகுறித்து நாராயணி மருத்துவமனை குழும இயக்குனர் டாக்டர் பாலாஜி கூறியதாவது:-
நாராயணி மருத்துவமனையில் உலகத்தரம் வாய்ந்த மருத்துவ உபகரணங்களும், திறமை வாய்ந்த மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள் உள்ளனர். நாங்கள் இந்த மருத்துவமனையை சேவை மனப்பான்மையுடன் நடத்தி வருகிறோம். தேவைப்பட்டால் நோயாளிகளை எங்களது ஆம்புலன்சிலேயே மருத்துவமனைக்கு அழைத்து வந்து சிகிச்சை அளிப்போம். சுமார் 25 கிலோமீட்டர் சுற்றளவிற்கு இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு உள்ளது. அனைத்து நோயாளிகளும், அவசர சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளும் மருத்துவமனைக்கு வர முடியாத சூழ்நிலையில் எங்கள் மருத்துவமனையை தொடர்பு கொண்டால் ஆம்புலன்ஸ் மூலம் வீட்டிற்கு செவிலியர்கள் அனுப்பப்பட்டு நோயாளியை பரிசோதனை செய்வார்கள்.
நோயாளிகளுக்கு டாக்டரின் சிகிச்சை என தேவைப்பட்டால் உடனடியாக டாக்டர் அனுப்பி வைக்கப்படுவார். இந்த மருத்துவ சேவை 24 மணி நேரமும் செயல்படும். வயதானவர்களுக்கும் கிராமப்புறத்தில் இருப்பவர்களுக்கும் இது ஒரு வரப்பிரசாதம்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் மாநகராட்சி மண்டல தலைவர்கள் நரேந்திரன், வெங்கடேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story