வியாபாரியை பீர் பாட்டிலால் தாக்கியவர் கைது
வியாபாரியை பீர் பாட்டிலால் தாக்கியவர் கைது செய்யப்பட்டார்.
கரூர்,
கரூர் சின்ன ஆண்டாங்கோவில் பகுதியை சேர்ந்தவர் நாகேந்திரன் (வயது 30). அதே பகுதியை சேர்ந்தவர் வினோத்குமார் (25). இவர்கள் தனித்தனியாக கரூர் பஸ் நிலையம் பகுதியில் வெள்ளரிக்காய் விற்று வியாபாரம் செய்து வருகின்றனர். இந்நிலையில் இருவருக்கும் இடையே தொழில் போட்டி காரணமாக பிரச்சினை இருந்து வந்துள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்றும் அப்பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபம் அருகே வியாபாரம் தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த வினோத்குமார், நாகேந்திரன் தலையில் பீர் பாட்டிலால் தாக்கியுள்ளார்.
இதையடுத்து காயம் அடைந்த நாககேந்திரன் கரூர் அரசு மருத்துவக்கல்லூாி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து நாேகந்திரன் கொடுத்த புகாரின்பேரில், கரூர் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜன் வழக்குப்பதிந்து, வினோத்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தார்.
Related Tags :
Next Story