தொண்டி மாணவர் விடுதியில் கலெக்டர் திடீர் ஆய்வு
தொண்டி மாணவர் விடுதியில் கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.
தொண்டி,
தொண்டி பேரூராட்சி பி.வி.பட்டிணத்தில் மத்திய உப்பு மற்றும் கடல் ரசாயன ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் கடற்பாசி வளர்ப்பில் ஈடுபட்டு வரும் மீனவ பெண்களுக்கு விதைப்பாசிகளை மாவட்ட கலெக்டர் சங்கர் லால் குமாவத் வழங்கினார்.அதனை தொடர்ந்து கலெக்டர் தொண்டி மேம்படுத்தப்பட்ட அரசு மருத்துவமனைக்கு சென்று ஆய்வு செய்தார். பின்னர் தொண்டி பழைய பஸ் நிலையம் அருகில் உள்ள அரசு பிற்படுத்தப்பட்டோர் மாணவர் விடுதிக்கு சென்று மாணவர்களுக்கு சமைக்கப்பட்டிருந்த உணவுகளை பார்வையிட்டு அதன் தரத்தை ஆய்வு செய்தார். அப்போது அங்கு மாணவர்கள் குறைவாக இருந்த நிலையில் அங்கு பணியில் இருந்த வார்டன் கூடுதலாக கணக்கு காண்பித்து இருந்தது தெரியவந்துள்ளது. மேலும் விடுதியை சரியான முறையில் பராமரிக்காமலும், நிர்வகிக்காமலும் இருந்ததை கண்டறிந்த கலெக்டர் உடனடியாக விடுதி வார்டன் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.அதன் பின்னர் அங்குள்ள அரசு ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதிக்கு சென்று அங்கும் மாணவர்களுக்கு சமைக்கப்பட்டிருந்த உணவுகளை பார்வையிட்டு அதன் தரத்தை ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது திருவாடானை தாசில்தார் செந்தில்வேல் முருகன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாண்டி, இளங்கோ, வட்டார மருத்துவ அலுவலர் கோவலக்கண்ணன், மீன்வள துறை துணை இயக்குநர் பிரபாவதி, மத்திய உப்பு மற்றும் கடல் ராசயன ஆராய்ச்சி நிறுவன தொழில்நுட்ப அலுவலர்கள் திருப்பதி பாரதிராஜா, ஒன்றிய பொறியாளர்கள் உள்பட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story