108 ஆம்புலன்ஸ் சேவை 24 மணி நேரமும் செயல்பட கோரிக்கை
108 ஆம்புலன்ஸ் சேவை 24 மணி நேரமும் செயல்பட கோரிக்கை விடுத்துள்ளனர்.
கிருஷ்ணராயபுரம்,
கிருஷ்ணராயபுரம் ஒன்றியம் லாலாபேட்டை பகுதியில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு புதிதாக மக்கள் பயன்பாட்டிற்கு 108 ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் பல்வேறு வகையில் பயன் அடைந்து வருகிறார்கள். இந்த 108 ஆம்புலன்ஸ் சேவை காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுமே செயல்பட்டு வருகிறது.
இதனால் இரவு நேரங்களில் விபத்து ஏதாவது ஏற்பட்டால் குளித்தலை, மாயனூர், பஞ்சப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 108 ஆம்புலன்ஸ் வருகிறது. இதனால் அதிக கால தாமதம் ஏற்படுகிறது. இதனால் விபத்தில் பாதிக்கப்படுபவர்கள், நோயாளிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே லாலாபேட்டையில் தொடங்கப்பட்ட 108 ஆம்புலன்ஸ் சேவை 24 மணி நேரமும் செயல்பட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் மாவட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story