பாதை கேட்டு தாசில்தார் அலுவலகம் முற்றுகை
பாதை கேட்டு தாசில்தார் அலுவலகம் முற்றுகையிடப்பட்டது.
அறந்தாங்கி,
அறந்தாங்கி அருகே இடையார் கிராமத்தை சேர்ந்தவர் தியாகராஜன் (வயது 32). இவருக்கு சொந்தமான இடத்தில் இருந்து அப்பகுதியில் உள்ள ஆதிதிராவிடர் காலனிக்கு செல்ல பாதை உள்ளது. இந்தநிலையில் தியாகராஜன், அந்த பாதையை அடைத்து விட்டு வேறு ஒரு இடத்தில் பாதை விட்டு உள்ளார். இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து அறந்தாங்கி தாசில்தார் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதையடுத்து தாசில்தார் காமராஜ் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி நேரில் வந்து பார்வையிட்டு அதன் பிறகு தீர்வு காணப்படும் என உறுதி அளித்தார். இதில் சமாதானம் அடைந்த அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story