தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 24 April 2022 12:17 AM IST (Updated: 24 April 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

புகாா் பெட்டி

மாடுகள் தொல்லை
  மதுரை மாவட்டம் மேலூர் தினசரி மார்க்கெட்டில் மாடுகளின் நடமாட்டம் அதிக அளவில் காணப்படுகிறது. வியாபாரிகள் விற்க வைத்து இருக்கும் காய்கறிகளை மாடுகள் சாப்பிட்டு செல்கின்றன. இதனால் வியாபாரிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர்.  சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து மார்க்கெட்டில் அலையும் மாடுகளை பிடித்து அப்புறப்படுத்தி அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும்.
இளங்கோவன், மேலூர்.
போக்குவரத்து நெரிசல்
மதுரை மாவட்டம் சோழவந்தான் தென்கரை இணைப்பு காமராஜர் பாலத்தில் மாலை மற்றும் இரவு நேரங்களில் 2 சக்கர வாகனங்கள் அதிக அளவில் நிறுத்தப்படுகிறது. இதனால் இந்த சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.  வாகன நிறுத்தத்தால் சிறு, சிறு விபத்துகளும் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பகுதியில் தேவையில்லாமல் நிறுத்தும் வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். 
ஜெயரூபன், தென்கரை.

தொற்றுநோய் பரவும் அபாயம் 
மதுரை மாவட்டம் வில்லாபுரம் மீனாட்சிநகர் மெயின்ரோட்டில் கழிவுநீர் நிரம்பி உள்ளது. இதனால் அந்த பகுதியில் கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகி தொற்றுநோய் பரவ வழிவகுக்கிறது. நிரம்பிய கழிவுநீரை அகற்றி கொசுக்கள் பரவாமல் இருக்க அதிகாரிகள்  நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சுகன்யா, வில்லாபுரம்.

சாலைவசதி 
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பூதிபுரம் அஞ்சல் கிருஷ்ணாபுரம் கிராமத்தில் சரியான சாலைவசதி இல்லை. இதனால் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள், வேலைக்கு செல்வோர் என அனைவரும் பெரிதும் சிரமப்படுகின்றனர். இதனால் குறிப்பிட்ட நேரத்திற்கு செல்ல முடிவதில்லை. எனவே இந்த கிராமத்தில் தார்ச்சாலை  வேண்டும்.
அகிலா சின்னசாமி, உசிலம்பட்டி.

கால்வாயில் அடைப்பு
ஆரப்பாளையம் கிராஸ்ரோடு செக்கடி தெருவில் உள்ள கழிவுநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் கழிவுநீர் நிரம்பி சாலையில் தேங்குகிறது. சாலையில் தேங்கும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு அடைந்து தொற்றுநோய் பரவும் அபாயம் நிலவுகிறது. ஆதலால் அதிகாரிகள் இந்த பகுதியில் உள்ள கால்வாய் அடைப்பை சரிசெய்ய வேண்டும்.
ஜான்சன், செக்கடி தெரு.


Next Story