மாடியில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பலி
மாடியில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி சிகிச்சை பலனின்றி இறந்தார்.
அரிமளம்,
அரிமளம் ஒன்றியம் ஏத்தநாடு கிராமத்தில் புதிதாக வீடு கட்டும் பணி நடைபெற்று வருகிறது. சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தாலுகா பொன்னம்பலம் கிராமத்தை சேர்ந்த சிவசாமி (வயது 65) என்பவர் கட்டிடத்தில் சென்ட்ரிங் வேலைக்காக கட்டிடத்தின் மேல் தளம் சென்று அளவு பார்த்து குறித்து கொண்டிருந்தார். அப்போது அவர் எதிர்பாராத விதமாக மாடியில் இருந்து கீழே தவறி விழுந்தார். இதையடுத்து, சக தொழிலாளர்கள் அவரை மீட்டு அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும், சிகிச்சை பலனின்றி சிவசாமி பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் தொடர்பாக கே.புதுப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story