நிலத்தில் ஏற்பட்ட திடீர் பள்ளம்


நிலத்தில் ஏற்பட்ட திடீர் பள்ளம்
x
தினத்தந்தி 24 April 2022 12:46 AM IST (Updated: 24 April 2022 12:46 AM IST)
t-max-icont-min-icon

விருதுநகர் அருகே காலி மனை நிலத்தில் திடீரென பள்ளம் ஏற்பட்டது.

விருதுநகர், 
விருதுநகர் அருகே காலி மனை நிலத்தில் திடீரென பள்ளம் ஏற்பட்டது. 
திடீர் பள்ளம் 
விருதுநகர் அருகே உள்ள புல்லலக்கோட்டை கிராமத்தில் வைரவன் என்பவருக்கு சொந்தமான காலி மனைநிலத்தில் திடீரென 1½ அடி அகலம், 10 அடி ஆழத்தில் ஒரு பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதற்கருகில் சில கட்டிடப் பணிகளும் நடைபெற்று வருகிறது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள் இதுபற்றி கிராம நிர்வாக அதிகாரிக்கு தகவல் தெரிவித்தனர்.
 கிராம நிர்வாக அதிகாரி ரத்ன குமார் இதுபற்றி விருதுநகர் தாசில்தார் செந்தில்வேலுக்கு தகவல் தெரிவித்தார். அவரும் அந்த இடத்தை ஆய்வு செய்துள்ளார். திடீர் பள்ளம் ஏற்பட்டதற்கான காரணம் குறித்து உடனடியாக தெரியவில்லை.
சுரங்கப்பாதை 
 இதுபற்றி தாசில்தார் செந்தில்வேலிடம் கேட்டபோது அவர் புவியியல் நிபுணரின் பணியிடம் விருதுநகர் மாவட்டத்தில் காலியாக உள்ள நிலையில் இதுபற்றி கனிம வளத்துறை அதிகாரியிடம் தெரிவித்துள்ளதாக கூறினார்.
 பள்ளம் ஏற்பட்டுள்ள இடத்தை பாதுகாப்பாக வேலி போட வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  திடீரென பள்ளம் விழுந்த இடத்தை மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து அதில் வேறு ஏதேனும் சுரங்கப் பாதை செல்கிறதா என்பதையும் கண்டறிய வேண்டும் என்று கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
 இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Next Story